Listeriosis

லிஸ்டீரியா என்பது பொதுவாக லிஸ்டீரியா மோனோசைட்டோஜீன்ஸ் எனப்படும் பாக்டீரியாவால் மாசுபட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஒரு நோயாகும். லிஸ்டீரியோசிஸ் (Listeriosis)என்பது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு ஏற்படும் ஒரு தீவிர நோயாகும். தொற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Last updated: 18 December 2025
Download

லிஸ்டீரியோசிஸ்(Listeriosis) என்றால் என்ன?

லிஸ்டீரியோசிஸ்( Listeriosis) என்பது Listeria monocytogenes எனப்படும் பாக்டீரியாவால் மாசுபட்ட உணவுகளை, சாப்பிடுவதால் ஏற்படும் ஒரு அரிய நோயாகும். லிஸ்டீரியா பாக்டீரியாக்கள் சுற்றுச்சூழலிலும் சில பச்சை உணவுகளிலும் பொதுவாக காணப்படும். லிஸ்டீரியா பாக்டீரியாவைக் கொண்ட உணவுகளை சாப்பிடுவது பெரும்பாலான மக்களுக்கு நோயை ஏற்படுத்தாது. நியூ சவுத் வேல்ஸில் ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 பேருக்கு மட்டுமே லிஸ்டீரியோசிஸ்( Listeriosis)  பாதிப்புகள் பதிவாகின்றன. லிஸ்டீரியோசிஸ் ( Listeriosis) அரிதானது என்றாலும், இது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.

அறிகுறிகள் என்ன?

The incubation period (between infection and symptoms) can vary from three to 70 days but on average is about three weeks. Infections may cause septicaemia (blood poisoning) and meningitis (inflammation of the brain). Infection during pregnancy can lead to miscarriage, stillbirth and infection of the newborn.

நோய்த்தொற்றுக்கும் அறிகுறிகளுக்கும் இடையிலான நோயரும்பு காலம் மூன்று முதல் 70 நாட்கள் வரை மாறுபடும், ஆனால் சராசரியாக மூன்று வாரங்கள் ஆகும். தொற்றுகள் செப்டிசீமியா (இரத்தம் விஷமாதல்) மற்றும் மூளைக்காய்ச்சல் (மூளை வீக்கம்) ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். கர்ப்ப காலத்தில் தொற்று ஏற்படின் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தொற்று ஆகியனவற்றிற்கு வழிவகுக்கும்.

அறிகுறிகளுக்குள் அடங்குபவை:  காய்ச்சல், தசை வலிகள், மற்றும் சில நேரங்களில் குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பைக் குடல் அறிகுறிகள். மிகவும் கடுமையான நிலமைகளில், மயக்கம் மற்றும் அதிர்ச்சி ஆகியனவும் அடங்கும். தொற்று மத்திய நரம்பு மண்டலத்திற்கு பரவினால், தலைவலி, கழுத்து விறைப்பு, குழப்பம், சமநிலை இழப்பு, வலிப்பு மற்றும் ஆழ்ந்த மயக்கம்(coma) போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்த நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு பேர் உயிரிழக்கக்கூடும்.

 இது எவ்வாறு பரவுகிறது?

லிஸ்டீரியா இயற்கையில் பரவலாக உள்ளது, இது பொதுவாக பலவகையான வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகள் இரண்டினாலும் பரவுகிறது. சமைக்காத இறைச்சி, பதப்படுத்தப்படாத பால், பதனிடப்படாத பழங்கள்
மற்றும் சமைக்காத காய்கறிகள் இந்த பாக்டீரியாவால் மாசுபடுத்தப்படலாம்.

லிஸ்டீரியோசிஸ்( Listeriosis)  ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளவர்கள் லிஸ்டீரியா பாக்டீரியாவால் மாசுபட்ட உணவை சாப்பிடுவதன் மூலம் தொற்றுக்குள்ளாகலாம். கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் மாசுபட்ட உணவை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு லிஸ்டீரியோசிஸ்( Listeriosis)  ஏற்படலாம். பதனிடப்படாத பச்சை பால், மென்மையான பாலாடைக்கட்டி (cheese), முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சாலடுகள் (எடுத்துக்காட்டாக, சாலட் சாலைகளில் -salad bar - உள்ளவை), கழுவப்படாத பச்சை காய்கறிகள், பட்டே(paté), குளிர் துண்டுகளாக்கப்பட்ட கோழியிறச்சி, ரொக்மெலன் பழம் (rockmelon) மற்றும் முன்கூட்டியே வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் பழச் சாலடுகள் (fruit salad) ஆகியவற்றுடன் நோய் தொற்று தொடர்புடையதாக இருக்கலாம்.

அபாயத்தில் உள்ளவர்கள் யார்?

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கரு, புதிதாகப் பிறந்த குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் (உதாரணமாக: புற்றுநோய் சிகிச்சை அல்லது ஸ்டீராய்டுகள் (steroids)பயன்படுத்துபவர்கள், மற்றும் நீரிழிவு, சிறுநீரக நோய், கல்லீரல் நோய் மற்றும் எச்.ஐ.வி (HIV) தொற்று உள்ளவர்கள்).

இது எவ்வாறு தடுக்கப்படுகிறது?

லிஸ்டீரியோசிஸைத் தடுக்க:

  • அதிக ஆபத்தான உணவுகளைத் தவிர்க்கவும் (கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி)
  • மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி அல்லது கோழி போன்ற விலங்குகள் சார்ந்த உணவை நன்கு சமைக்கவும்
  • சாப்பிடுவதற்கு முன் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவவும்
  • சமைக்காத இறைச்சி காய்கறிகள் போன்றவற்றை, சமைத்த உணவுகள் மற்றும் சாப்பிடத் தயாராக உள்ள உணவுகளிலிருந்து தனியாக வைத்திருங்கள் (அதாவது, இறைச்சியின் இரத்தம் மற்றைய உணவுகளுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்காதீர்கள்)
  • சமைக்காத இறைச்சி மற்றும் சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகளுக்கு (உதாரணமாக, சமைத்த உணவுகள் மற்றும் சாலடுகள்) தனித்தனி வெட்டும் பலகைகளைப் பயன்படுத்தவும்
  • உணவு தயாரிப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளைக் கழுவவும்
  • கத்திகள் மற்றும் வெட்டும்பலகைகளை சமைக்கப்படாத உணவுகளுடன் கையாண்டபின் கழுவவும்
  • விலங்குகளைக் கையாண்ட பிறகு உங்கள் கைகளைக் கழுவவும்
  • பழுதுபடக்கூடிய உணவுகளை குளிர்ந்த (5 பாகை செல்சியஸுக்குக் குறைவான) குளிர்சாதன பெட்டியில் சேமித்து, முடிந்தவரை விரைவில் கழுவி சாப்பிட வேண்டும்.

லிஸ்டீரியோசிஸ்( Listeriosis)  அபாயம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாதவை:

  • ராக்மெலன்(rockmelon)
  • முன்கூட்டியே வெட்டப்பட்ட பழம் அல்லது பழக்கலவை(fruit salads) உட்பட முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பழம் (முன்கூட்டியே பொதியிடப்பட்ட , பஃபேக்கள் (buffets)அல்லது சாலட் பார்களில் (salad bars) உள்ளவை)
  • கோல்ஸ்லாவ் (coleslaw)உட்பட முன்கூட்டியே பொதியிடப்பட்ட குளிர் சாலட்(salad) (முன்கூட்டியே பொதியிடப்பட்ட, பஃபேக்கள் (buffets)அல்லது சாலட் பார்களில் (salad bars) உள்ளவை)
  • சமைக்கப்படாமல் உறையவைக்கப்பட்ட காய்கறிகள்,
  • முன்கூட்டியே சமைத்த குளிர்க் கோழி (முழுமையாக அல்லது துண்டுகளாக்கப்பட்ட)
  • மென்மையான(delicatessen )குளிர் இறைச்சிகள் (புதிதாக வெட்டப்பட்ட, முன்கூட்டியே பொதிசெய்யப்பட்ட அல்லது சாண்ட்விச்பார்களில்(sandwich Bar) இருந்து)
  • பாட்டே(paté) அல்லது இறைச்சி தடவுப் பொருட்கள்
  • சமைக்கப்படாத கடல் உணவு
  • புகையூட்டப்பட்ட கடல் உணவு (எடுத்துக்காட்டாக, புகையூட்டப்பட்ட சால்மன்), சமைத்து சூடாக பரிமாறப்படாவிட்டால்
  • குளிர்ந்த கடல் உணவு (எடுத்துக்காட்டாக, சாப்பிடத் தயாராகவுள்ள இறால்)
  • பதனிடப்படாத (unpasteurised )பால் அல்லது பால் பொருட்கள்
  • ப்ரை(Brie),கேம்பெர்ட் (Camembert) ரிக்கோட்டா போன்ற மென்மையான பாலாடைக்கட்டிகள் அல்லது ப்ளூ-வெயின் (blue-vein) (சமைத்து மற்றும் சூடாக இருக்கும்போது சாப்பிடப்படாவிட்டால்)
  • மென்மையான ஐஸ்கிரீம்
  • முளைத்த விதைகள்

இது எவ்வாறு கண்டறியப்படுகிறது?

லிஸ்டீரியோசிஸ்( Listeriosis)  நோயினை மருத்துவரால் வேண்டப்பட்ட இரத்தம் அல்லது பிற பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தலாம்.

இதற்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?

சிகிச்சையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ( antibiotics)மற்றும் ஆதரவு சிகிச்சை (supportive therapy) ஆகியவை அடங்கும். கர்ப்ப காலத்தில் தொற்று ஏற்பட்டால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பெரும்பாலும் கரு அல்லது புதிதாகப் பிறந்த குழந்தையின் தொற்றுநோயைத் தடுக்கலாம். உடனடி சிகிச்சையளிப்பினும் கூட, குறிப்பாக முதியவர்கள் மற்றும் கடுமையான பிற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சில தொற்றுக்கள் நோயாளியின் மரணத்திற்கு வழிவகுக்கலாம்.

பொது சுகாதாரத்தின் பதில் நடவடிக்கை என்ன?

ஆய்வகங்கள் லிஸ்டீரியோசிஸ்( Listeriosis)  தொற்று விபரங்களை உள்ளூர் பொது சுகாதார பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும்.

பொது சுகாதார பிரிவு ஊழியர்கள் மருத்துவரையும் நோயாளியையும் (அல்லது குடும்பத்தினரை) நேர்காணல் செய்து தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிவர்.

லிஸ்டீரியோசிஸ்( Listeriosis)  பற்றிய சுற்றுச்சூழல் விசாரணைக்கு NSW உணவு ஆணையம் NSW சுகாதாரத்துடன் இணைந்து, பொறுப்பாகும்.

நீங்கள் லிஸ்டீரியோசிஸ்( Listeriosis)  அபாயத்தில் இருந்தால் மற்றும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் சுகாதார பராமரிப்பு வழங்குநரை அல்லது உள்ளூர் பொது சுகாதார பிரிவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலதிக வளங்கள்

மேலதிக ஆலோசனைக்கு, இலவச மற்றும் ரகசிய மொழிபெயர்ப்பு மற்றும் உரைப்பெயர்ப்பு சேவையை (TIS) 131 450 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும். உங்கள் மொழியை சொல்லி நீங்கள் பின்வருபவர்களுடன்  பேசவிரும்புவதாக கூறுங்கள்:

  • 1300 066 055-இல் உங்கள் உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவு
  • இலவச 24 மணி நேர சுகாதார ஆலோசனைகளுக்கு 1800 022 222-இல் Healthdirect-ஐ தொடர்புக்கொள்ளவும்

லிஸ்டீரியோசிஸ்( Listeriosis)

தொற்றை தடுக்க மேலதிக தகவல்களுக்கு:

Current as at: Thursday 18 December 2025
Contact page owner: Communicable Diseases