சிக்குன்குனியா நோய், சிக்குன்குனியா வைரஸ் தொற்றுக்குள்ளான கொசுக்களால் மனிதர்களுக்கு பரப்பப்படுகிறது. அறிகுறிகளில் காய்ச்சல், தோல் அழற்சி மற்றும் மூட்டு வலி ஆகியவை அடங்கும். இந்த வைரஸ் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, ஆசியா, மேற்கு பசிபிக் மற்றும் அமெரிக்காவில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கொசுக்களால் கடிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.
சிக்குன்குனியா வைரஸ் தொற்று (சிக்குன்குனியா) என்பது இரண்டு வகையான கொசுக்களால் பரப்பப்படும் ஒரு வைரஸால் ஏற்படுகிறது:
சிக்குன்குனியாவின் அறிகுறிகளில் பின்வருபவை அடங்கும்:
தொற்றுடைய கொசு கடித்ததற்குப் பின் சுமார் 7 முதல் 10 நாட்களில் அறிகுறிகள் உருவாகும்.
சிக்குன்குனியா வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு சோர்வும், பல மாதங்களுக்கு மூட்டு வலியும் தொடரக்கூடும்.
சிக்குன்குனியா வைரஸ் தொற்றுள்ள கொசு கடித்த பின்னர் மக்களுக்கு சிக்குன்குனியா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. சிக்குன்குனியா ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாக பரவாது.
இரத்தத்தில் சிகுன்குன்யா வைரஸ் உள்ள நபரின் இரத்தத்தை உணவாக கொசுக்கள் உறிஞ்சும் போது கொசுக்கள் வைரஸால் பாதிக்கப்படும். தொற்றுக்குள்ளான கொசுவின் உடலில் வைரஸ் பெருக்கமடையும், அந்தக் கொசு பிறரை கடிக்கும் போது, அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது.
ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் சிக்குன்குனியா வைரஸ் காணப்படுகிறது. சிக்குன்குனியா ஏற்படும் இடங்களுக்குச் பயணிக்கும் மக்கள், இந்த தொற்றுநோயைப் பரப்பக்கூடிய கொசு வகைகளால் (டெங்கு கொசு அல்லது ‘ஏசியன் டைகர்’ கொசு) கடிக்கப்படும்போது தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
சிக்குன்குனியா மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடியவர்கள்:
தற்போது ஆஸ்திரேலியாவில் சிக்குன்குனியாவிற்கு எதிரான தடுப்பூசிக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
கொசு கடித்தலைத் தடுக்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
மேலே உள்ள பொதுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது நீங்கள் செய்ய வேண்டியவை:
கொசு கடி தடுப்பு குறித்த மேலதிக தகவல்களுக்கு, கொசுக்கள் ஒரு சுகாதார அபாயம் என்ற தகவல் தாளைப் பார்க்கவும். Smartraveller இணையதளத்தில், குறிப்பிட்ட பயண இடங்கள் தொடர்பான சுகாதார தகவல்களும் உள்ளன.
உங்கள் மருத்துவர் இரத்த மாதிரியை எடுத்து சிக்குன்குனியா வைரஸ் உள்ளதா என பரிசோதிக்க முடியும். சமீபத்திய தொற்றுநோயை உறுதிப்படுத்த இரண்டாவது இரத்த பரிசோதனையும் தேவைப்படலாம்.
சிக்குன்குனியாவுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
சிக்குன்குனியாவுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. அழற்சி எதிர்ப்பு மருந்துகளுடன் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது குறித்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்.
பொது சுகாதாரத்தின் பதில் நடவடிக்கை என்ன?
ஒருவருக்கு சிக்குன்குனியா வைரஸ் இருப்பதை ஆய்வகங்கள் உறுதி செய்யும் போது, அவர்கள் அது பற்றி தங்கள் உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவுக்கு அறிவிப்பார்கள்.
பொது சுகாதாரப் பிரிவுகள், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர் பற்றியும் மேலும் தகவல் திரட்டி, அவருக்கு எங்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டறியும்.
இந்தத் தகவல், தொற்று பரவல் குறைவாக இருக்கக்கூடிய பகுதிகளில் உண்மையில் பரவல் இடம்பெறுகிறதா என்பதை அடையாளம் காண உதவுகிறது. மேலும், சிகுன்குன்யா வைரஸை பரப்பக்கூடிய கொசுக்கள் உள்ள ஆஸ்திரேலியப் பகுதிகளில் நோய் பரவுவதை தடுப்பதும் இதன் நோக்கமாகும்.
மேலதிக வளங்கள்
உங்களுக்கு சிகுன்குன்யா அறிகுறிகள் இருப்பதாக எண்ணினால் உடனடியாக உங்கள் மருத்துவருடன் பேசுங்கள்,அல்லது அவசர நிலை ஏற்பட்டால் (000) மூன்று பூஜ்ஜியங்கள் என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.
மேலதிக ஆலோசனைக்கு, இலவச மற்றும் ரகசிய மொழிபெயர்ப்பு மற்றும் உரைப்பெயர்ப்பு சேவையை (TIS) 131 450 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும். உங்கள் மொழியை சொல்லி நீங்கள் பின்வருபவர்களுடன் பேசவிரும்புவதாக கூறுங்கள்:
சிகுன்குன்யா தொற்றை தடுக்க மேலதிக தகவல்களுக்கு: கொசுக்கள் ஒரு சுகாதார அபாயம் தகவல் தாள் மற்றும் வெளிநாட்டில் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது எப்படி என்பவற்றை பார்க்கவும்