ஷிகெல்லாசிஸ் என்பது ஷிகெல்லா (shigellosis) பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும். இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது மேலும் இது மக்களிடையே எளிதில் பரவுகிறது.
ஷிகெல்லா (shigellosis) தொற்று, ஷிகெல்லாசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஷிகெல்லா (shigellosis) பாக்டீரியாவால் ஏற்படுகிறது. ஷிகெல்லா (shigellosis) பாக்டீரியா பாதிக்கப்பட்ட நபரின் மலம் (poo) மூலம் அல்லது அசுத்தமான நீரைக் குடித்தல் அல்லது உணவை சாப்பிடுவதன் மூலம் பரவுகிறது. இது பொதுவாக வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது.
ஷிகெல்லா (shigellosis) நோய்த்தொற்றின் அறிகுறிகளுள் அடங்குபவை:
தொற்று ஏற்பட்ட 1-3 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் பொதுவாகத் தொடங்கும். அறிகுறிகள் பொதுவாக 4-7 நாட்கள் நீடிக்கும், ஆனால் நீண்ட காலத்திற்கும் நீடிக்ககூடும்.
சிலருக்கு, அறிகுறிகள் 1 வாரம் வரை தொடங்காமல் இருக்கலாம் அல்லது அறிகுறிகளே உருவாகாமலும் இருக்கலாம்.
ஷிகெல்லா (shigellosis) மலத்தில் (poo) காணப்படுகிறது. நீங்கள் ஷிகெல்லா (shigellosis) தொற்றைப் பெறக்கூடிய வழிகள்:
ஷிகெல்லா (shigellosis) தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளவர்கள்:
ஷிகெல்லா (shigellosis) தொற்று ஏற்படுவதைத் தடுக்க, நீங்கள் செய்ய வேண்டியது:
ஷிகெல்லா (shigellosis) நோய் பரவலாக உள்ள நாடுகளுக்குச் செல்லும் மக்கள் செய்ய வேண்டியவை:
ஷிகெல்லா (shigellosis) தொற்று உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை:
மருத்துவர் மலத்தின் (poo) மாதிரியைச் சோதித்து நோயைக் கண்டறிவார்.
ஷிகெல்லா (shigellosis) தொற்று உள்ளவர்களுக்கு, நோயின் தீவிரத்தையும் நிடிக்கும் கால அளவையும் குறைக்க, பொதுவாக மருத்துவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைப்பார். நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அந்த நபரால் மற்றவர்களுக்கு தொற்றும் தன்மைக் காலத்தையும் குறைக்கலாம்.
நீரிழப்பைத் தவிர்க்க நிறைய திரவம் குடிப்பது முக்கியம். இளம் சிறுவர்கள் (குறிப்பாகக் குழந்தைகள்) வயிற்றுப்போக்கினால் நீரிழப்பிற்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளதால் பெற்றோர்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
ஷிகெல்லா (shigellosis) பாதிப்பு குறித்து ஆய்வகங்கள் உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவுக்குத் தெரிவிக்க வேண்டும். பொது சுகாதாரப் பிரிவு ஊழியர்கள், தொற்றாளர்களையும் அவர்களின் பராமரிப்பாளர்களையும் நேர்காணல் செய்து, நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிந்து, மேலும் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பர்.
மேலதிக ஆலோசனைக்கு, இலவச மற்றும் ரகசிய மொழிபெயர்ப்பு மற்றும் உரைப்பெயர்ப்பு சேவையை (TIS) 131 450 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும். உங்கள் மொழியை சொல்லி நீங்கள் பின்வருபவர்களுடன் பேசவிரும்புவதாக கூறுங்கள்: