கொசுக்களுக்கும் அவை பரப்பும் நோய்களுக்கும் எதிரான சிறந்த பாதுகாப்பு கொசு கடித்தலைத் தவிர்ப்பதுதான். கடிப்பதைத் தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் - தெளிப்பானைப் பயன்படுத்துங்கள், மூடி வையுங்கள், சுத்தப்படுத்துங்கள், திரையிட்டு மூடுங்கள்!
மனிதர்களும் விலங்குகளும் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடால் கொசுக்கள் ஈர்க்கப்படுகின்றன, மேலும் நமது உடல் வெப்பமும் நாம் இருக்கும் இடத்தைக் கண்டறிய கொசுக்களுக்கு உதவுகிறது. சிலர் மற்றவர்களை விட அதிகமாக கடிக்கப்படுவதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மக்களின் தோலின் வாசனை அவர்கள் கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.
விடியற்காலை மற்றும் சூரிய அஸ்தமனம் மற்றும் மாலை வேளைகளில் கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த நேரங்களில் கடிக்கப்படும் அபாயத்தைக் குறைக்க கவனமாக இருங்கள்.
வெளிர் நிற ஆடைகளை விட, கருமையான மற்றும் கருப்பு நிற ஆடைகளை எளிதாகக் கண்டறிவதால், கொசுக்கள் கருமையான ஆடைகளை அணிபவர்களிடம் அதிகம் ஈர்க்கப்படுகின்றன.
வெளிர் நிற ஆடைகள் அதிக கொசுக்களை ஈர்க்காது என்றாலும், நீங்கள் கொசு விரட்டிகளை அணியவில்லை என்றால் நீங்கள் கடிக்கப்படலாம்.
அணியக்கூடிய கொசு விரட்டி சாதனங்கள் (ஒட்டும் பட்டைகள் அல்லது கைப்பட்டிகள் உட்பட), அல்லது அல்ட்ரா-சோனிக் சாதனங்கள் மற்றும் கைபேசி செயலிகள் பயன்பாடுகள் கொசுக்களிடமிருந்து பயனுள்ள பாதுகாப்பை வழங்காது.
நீங்கள் செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள விஷயம் என்னவென்றால், DEET, ‘பிகாரிடின்’ அல்லது எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் அடங்கிய மேற்பரப்பில் பூசப்படும் கொசு விரட்டும் திரவத்தைப் பயன்படுத்துவதும், நீண்ட, தளர்வான ஆடைகளை அணிவதும் ஆகும்.
சில வகையான உணவு மற்றும் பானங்கள் கொசுக்களைக் கடிக்காமல் தடுக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. உங்கள் கொல்லைப்புறத்தில் கொசுக்களைக் குறைப்பது மற்றும் கொசு விரட்டியைப் பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஆடைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பைப் பயன்படுத்துவது நல்லது.
‘டையெத்தைல்டொமைடு’ (DEET), பி’காரிடின்’ அல்லது எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட மேற்பரப்பில் பூசப்படும் கொசு விரட்டும் திரவங்கள் கொசுக்களுக்கு எதிரான மிகவும் பயனுள்ள விரட்டிகளாகும். இந்த சேர்க்கைகள் கொசு விரட்டி சூத்திரங்களின் உள்ளடக்கம் குறித்த லேபிளில் பட்டியலிடப்பட்டுள்ளன. விரட்டியின் வலிமை பாதுகாப்பின் கால அளவை தீர்மானிக்கிறது, அதிக செறிவுகள் நீண்ட கால பாதுகாப்பை வழங்குகின்றன. மீண்டும் பயன்படுத்துவதற்கான நேரங்களுக்கு எப்போதும் லேபிளைச் சரிபார்க்கவும்.
கொசுக் கடியிலிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால், கொசு கைப்பட்டிகள் மற்றும் ஒட்டும் பட்டைகள் பரிந்துரைக்கப்படுவதில்லை.
தோலில் தெரியக்கூடிய அனைத்து பகுதிகளிலும் கொசு விரட்டும் திரவத்தை மெல்லிய படலமாக சமமாக தடவிக் கொடுக்கவும் மற்றும் நன்றாக தேய்க்கவும். சில இடங்களில் 'பனி' போல் தெளிப்பது முழுமையான பாதுகாப்பை வழங்காது.
கண்கள் மற்றும் வாய்க்கு அருகில், திறந்த காயங்கள், கிழிந்த தோல் அல்லது சிராய்ப்புகள் உள்ள இடங்களிலும் கொசு விரட்டியைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். எப்போதும் தயாரிப்பு லேபிளில் உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், முதலில் சன்ஸ்கிரீனைப் பூசிவிட்டு, பின்னர் கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள். சிறு குழந்தைகள் தாங்களாகவே கொசு விரட்டியைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
ஒரு கொசு விரட்டியின் வலிமை பாதுகாப்பின் நீளத்தை தீர்மானிக்கிறது, அதிக செறிவுகள் நீண்ட கால பாதுகாப்பை வழங்குகின்றன. தயாரிப்பு வழிமுறைகளின்படி அல்லது கொசுக்கள் கடிப்பதை நீங்கள் கவனிக்கும்போது விரட்டியை மீண்டும் பயன்படுத்தவும்.
வியர்வை வெளியேறும் போது கொசு விரட்டியின் செயல்திறன் குறையும். எனவே, அதிக உழைப்பு தேவைப்படும் செயல்கள் செய்யும் போது அல்லது வெயில் காலங்களில், கொசு விரட்டியை அடிக்கடி மீண்டும் தடவ வேண்டியிருக்கும். நீச்சலுக்குப் பிறகும், கொசு விரட்டியை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
கொசு விரட்டிகள் கொசுக்களின் மணம் மற்றும் சுவை போன்ற புலன்களைக் குழப்பி உங்கள் தோலை கண்டறிந்து கடிக்காமல் தடுக்கின்றன.
இலையான் (ஈ) மருந்துகள் போல இல்லாமல், கொசு விரட்டும் திரவங்களைத் தெளிப்பது கொசுக்களைக் கொல்லாது; ஆனால் அவை உங்களை கடிப்பதைத் தடுக்கும். இந்த கொசு விரட்டிகள் தடவப்பட்ட பகுதிகளை மட்டுமே பாதுகாக்கும் — பாதுகாப்பற்ற சிறிய தோல் பகுதியை கூட கொசுக்கள் கடிக்கத் தயாராக இருக்கும். எனவே, விரட்டியை சீராக பயன்படுத்துவது அவசியம்.
DEET, பிகாரிடின் மற்றும் எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் ஆகியவை அடங்கிய பூச்சி விரட்டிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் Australian Pesticides and Veterinary Medicines Authority - இல் (ஆஸ்திரேலிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் கால்நடை மருந்துகள் ஆணையம்) (APVMA) பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாணையம் தயாரிப்புகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை சரிபார்க்கிறது. கொசு கைப்பட்டிகள் அல்லது ஒட்டிகள் கொசுக்களுக்கு எதிராக செயல்படுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இயற்கை விரட்டிகள் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பை மட்டுமே வழங்குகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளை பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்துங்கள் மற்றும் லேபிளில் உள்ள வழிமுறைகளை கவனமாக வாசிக்கவும்.
பெரும்பாலான பூச்சி விரட்டிகள், வழிமுறைகளின்படி பயன்படுத்தப்படும் போது, 3 மாதங்கள் மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை. இருப்பினும், சில வகை தயாரிப்புகள் 12 மாதங்களுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கே பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றன – எனவே தயாரிப்பின் லேபிளில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட வயதைக் கவனமாக பரிசீலிக்க வேண்டும். DEET, பிகாரிடின் அல்லது எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் திரவங்களே மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.
பகல் நேரத்தில் குழந்தைகளை பாதுகாக்க, தினமும் காலையில் அவர்களுக்கு பூச்சி விரட்டியை தடவுங்கள். குழந்தைகள் அதைத் தாங்களாகவே பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், மேலும் எப்போதும் லேபிளில் உள்ள வழிமுறைகளை வாசிக்கவும்.
சிட்ரோனெல்லா, யூகலிப்டஸ், தேயிலை மர எண்ணெய் மற்றும் பிற 'இயற்கை' தயாரிப்புகள் போன்ற இயற்கை விரட்டிகள் பொதுவாக கொசுக் கடியிலிருந்து மிகக் குறைந்த பாதுகாப்பையே வழங்குகின்றன.
ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் அனைத்து பூச்சி விரட்டிகளும் Australian Pesticides and Veterinary Medicines Authority-இல் (APVMA) பதிவு செய்யப்பட வேண்டும், இவ்வாணையம் தயாரிப்புகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை சரிபார்க்கிறது. APVMAவில் பதிவு செய்யப்படாத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது தோலில் தீவிர எதிர்வினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சிறந்த வழி:
பெரும்பாலான கொசுக் கடி பகுதியை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவுவதன் மூலமோ அல்லது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலமோ நிர்வகிக்கலாம். ஆண்டிஹிஸ்டமைன் கிரீம்களும் அரிப்பைப் போக்கக்கூடும். தயாரிப்பு லேபிளில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கடித்த இடத்தில் சொறிவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது சருமத்தை கீறி தொற்றுக்கு வழிவகுக்கும். தொற்று ஏற்பட்ட கொசு கடித்த பகுதியின் அறிகுறிகள் வீக்கம், வலி, சிவத்தல் மற்றும் அழற்சி ஆகியவை அடங்கும். கொசு கடித்த பகுதியில் தொற்று ஏற்பட்டதாக நீங்கள் நினைத்தால், உங்கள் மருந்தாளரிடம் உதவி பெறவும்.
கொசுக் கடிக்கு பிறகு, உங்களுக்கு தோலில் அழற்சி, காய்ச்சல், சளி, தலைவலி, மூட்டு அல்லது தசை வலி (வீக்கம் அல்லது விறைப்பு), சோர்வு போன்ற சளிக்காய்ச்சல் அறிகுறிகள் தோன்றினால், அல்லது நீங்கள் பொதுவாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள், அல்லது அவசரகாலத்தில் டிரிபிள் ஜீரோ (000) என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது உங்கள் அருகிலுள்ள அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்லவும்.
பயணம் அல்லது முகாமிடும் போது கொசுக்களை எப்படித் தவிர்க்கலாம்?
கடித் தடுப்பு வளங்கள்