​​​உங்களுக்கு விரைவாக மருத்துவ உதவி தேவையா?

Urgent care இப்போது கிடைக்கிறது.

Urgent care என்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத ஆனால் விரைவான மருத்துவ கவனிப்பு தேவைப்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்கான சேவையாகும்.

மெடிக்கேர் என்ற மருத்துவ அட்டை வைத்திருப்பவர்களுக்கும் சமூகம் சார்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் Urgent care இலவசம்.

Urgent care-யைப் பெற, 1800 022 222 என்ற எண்ணில், 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும், healthdirect-ஐ இலவசமாக அழைக்கவும்.

மொழி ஆதரவுதவிக்கு, முதலில் TIS நேஷனலை 131 450-இல் அழைத்து, healthdirect-ஐ கேட்கவும்.

Health Direct என்பது இணையதளம், செயலி மற்றும் தொலைபேசி உதவி சேவை எண் மூலம் சுகாதார தகவல் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் சேவையாகும்,

ஒரு செவிலியர் உங்கள் அழைப்பிற்குப் பதிலளிப்பார், சில கேள்விகளை உங்களிடம் கேட்டதற்கு பின், உங்கள் உடல்நலத் தேவைகளுக்கு சரியான இடத்தில் உள்ள சரியான கவனிப்புடன் உங்களை இணைப்பார்.

Healthdirect செவிலியர் பின்வருபவற்றை செய்யலாம்:

  • தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் உங்களை சுகாதார நிபுணருடன் இணைப்பது.
  • உள்ளூர் Urgent care சேவையில் உங்கள் சந்திப்பிறகான முன்பதிவு செய்வது.
  • உங்களின் வழக்கமான GP அல்லது மருத்துவர் உட்பட, பிற பொருத்தமான, உள்ளூரில் கிடைக்கும் சுகாதாரப் சேவையுடன் உங்களை இணைப்பது.
  • உங்கள் நிலைமை அவசரமாக இருந்தால், ஆம்புலன்ஸை அழைப்பது அல்லது அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்ல உங்களை வழிநடத்துவது

உங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவையா?

  • உங்களுக்கு செவித்திறன் அல்லது பேச்சு ஆதரவுதவி தேவைப்பட்டால், Access Hub​​ என்ற National Relay Service இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு ஏற்ற ரிலே முறையைத் தேர்வு செய்த பின்னர் healthdirect-ஐ கேட்கவும்.
  • உங்களுக்கு வேறு ஆதரவுதவி தேவைகள் இருந்தால், h​ealthdirect -இல் உங்கள் அழைப்பிற்குப் பதிலளிக்கும் செவிலியரிடம் தெரிவிக்கவும்.

அவசரகாலத்தில், எப்போதும் மூன்று பூஜ்ஜியங்களை (000) அழைக்கவும்

உங்கள் உடல்நலப் பிரச்சினை உயிருக்கு ஆபத்தான அவசரநிலை என்றால், எப்போதும் டிரிபிள் ஜீரோவை (000) அழைக்கவும்.

உயிருக்கு ஆபத்தான அவசரநிலைகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

  • திடீர் உடல் சரிவு
  • மார்பு அழுத்தம் அல்லது வலி 10 நிமிடத்திற்கு மேல் நீடித்தல்
  • சுவாசிப்பதில் சிரமங்கள்
  • கட்டுப்படுத்த முடியாத இரத்தப்போக்கு
  • கடுமையான மனநல பிரச்சனைகள்.

NSW-இல் urgent care சேவைகள் பற்றிய தகவல்

மற்றைய சுகாதார சேவைகளால் விரைவாகவும் சரியானதாகவும் சிகிச்சையளிக்கப்படக்கூடிய urgent care தேவைகளுடன் பலர் NSW-இல் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு வருவதினால் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகின்றன,

NSW அரசு 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் NSW-இல் 25 urgent care சேவைகளை வழங்க இரண்டு ஆண்டுகளுக்கு $124 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.

NSW சமூகங்களில் இந்த urgent care சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த நோயாளிகள் மீது அவசர சிகிச்சை பிரிவுகள் கவனம் செலுத்த ஆதரவுதவி வழங்குகிறது

NSW-இல் urgent care சேவைகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்​​​​​​​

  • Urgent care என்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத நோய் அல்லது காயத்திற்கு 2-12 மணி நேரத்திற்குள் தேவைப்படும் மருத்துவ கவனிப்பு ஆகும். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே உள்ள சுகாதார அமைப்பில் இந்த மருத்துவ கவனிப்பை பாதுகாப்பாக வழங்க முடியும்.
  • Urgent care சேவை என்பது விரைவான மருத்துவ கவனிப்பு தேவைப்படும் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலைகளுக்கு குறுகிய கால, ஒரு முறை மட்டும் மருத்துவ கவனிப்பு தேவைகளை வழங்கும் ஒரு சுகாதார சேவையாகும்.

    Urgent care சேவைகள் நேரில் அல்லது மெய்நிகரில் (தொலைபேசியில் அல்லது வீடியோ அழைப்பின் மூலம்) வழங்கப்படுகின்றன.

  • உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத ஒரு உடல்நலப் பிரச்சினைக்கு விரைவான மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டால் அல்லது சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டுவிடக்கூடாத உடல்நலப் பிரச்சினைக்காக உள்ளூர் குடும்ப மருத்துவரிடம் (GP) சந்திப்பிற்கான முன் அனுமதி பெற முடியாவிட்டால், மக்கள் urgent care சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

    Urgent care சேவைகள், பரபரப்பாக இயங்கி வரும் அவசர சிகிச்சைப் பிரிவில் மக்களை காத்திருக்க விடாமல், அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை விரைவாக வழங்குகின்றன.
  • NSW-இல் வசிக்கும் அல்லது வருகை தரும் Urgent care தேவைகளுடன் உள்ள அனைத்து வயதினரும், 1800 022 222 என்ற எண்ணில் Healthdirect- அழைப்பதன் மூலம் நேரடியாக மற்றும் மெய்நிகர் வழியாக urgent care சேவைகளை அணுகலாம். மொழி ஆதரவுதவிக்கு, மக்கள் முதலில் TIS நேஷனலை  131 450 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு healthdirect- கேட்க வேண்டும்.

    healthdirect-  இலவசமாக, 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் அழைக்கலாம். அழைப்பாளர்கள் பதிவுசெய்யப்பட்ட செவிலியருடன் பேசுவர். செவிலியர் அவர்களின் நிலை குறித்து சில கேள்விகளைக் கேட்டதற்கு பின்,  urgent care சேவை உட்பட ஆனால் அதனுடன் மட்டும் மட்டுப்படுத்தாமல் அவர்களின் நிலைமை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப சரியான இடத்தில் உள்ள அவர்களுக்குத் தேவையான கவனிப்புக்கு வழிகாட்டுவார்.

    healthdirect- அழைக்கும் நபர்கள் விரும்பினால், ஆண் அல்லது பெண் செவிலியரை தெரிவு செய்து பேசக் கோர முடியும்.

  • செவித்திறன் அல்லது பேச்சு குறைபாடுகள் உள்ளவர்கள் முதலில் Access Hub​ என்ற National Relay Service இணையதளத்திற்குச் சென்று தங்களுக்கு ஏற்ற ரிலே முறையைத் தேர்வு செய்த பின்னர் healthdirect-ஐக் கேட்கவும்.​​​​​

  • மக்கள் கடுமையான காயம் அல்லது நோய் அல்லது உயிருக்கு ஆபத்தான அவசரநிலை இருந்தால் மூன்று பூஜ்ஜியங்களில் (000) ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும் அல்லது உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டும்.

    உயிருக்கு ஆபத்தான அவசரநிலைகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

    • திடீர் உடல் சரிவு
    • மார்பு அழுத்தம் அல்லது வலி 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்தல்
    • சுவாசிப்பதில் சிரமங்கள்
    • கட்டுப்படுத்த முடியாத இரத்தப்போக்கு
    • கடுமையான மனநல பிரச்சனைகள்.​
  • ஆம். உரைப்பெயர்ப்பாளர் சேவைகளை கோரும் அல்லது தேவைப்படும் எந்தவொரு நபருக்கும் அவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

    healthdirect-ஐ அழைப்பதன் மூலம் மக்கள் urgent care சேவைகளை அணுகலாம். உரைப்பெயர்ப்பாளர் ஆதரவுதவிக்கு, மக்கள் முதலில் TIS நேஷனலை 131 450-இல் அழைத்து healthdirect-ஐ 1800 022 222-இல் அழைக்கும்படி கேட்க வேண்டும்.

    healthdirect அழைப்பாளரை தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் மெய்நிகர் urgent care சேவையுடன் இணைத்தால், உரைப்பெயர்ப்பாளரும் அழைப்பாளருடன் சேர்ந்து சேவையுடன் இணைக்கப்படுவார் அல்லது Healthdirect தொலைபேசி அல்லது காணொளி அழைப்பில் இணைந்துள்ள அழைப்பாளருடன் ஒரு உரைப்பெயர்ப்பாளரை இணைக்க ஏற்பாடு செய்யும்.

    h​ealthdirect , அழைப்பாளரை நேரடி urgent care சேவையுடன் இணைத்தால், உரைப்பெயர்ப்பாளர் தேவை என்று சேவைக்கு அறிவுறுத்தப்படும். நேரடியாக அல்லது தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பு மூலம் உரைப்பெயர்ப்பாளர் ஒருவரை சரியான நேரத்தில் ஏற்பாடு செய்வது urgent care சேவையின் பொறுப்பாகும்.

  • விரைவான மருத்துவ கவனிப்பு தேவைப்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கும் நேரடி மற்றும் மெய்நிகர் urgent care சேவைகள் பல உள்ளன.

    உயிருக்கு ஆபத்தை விளைவிக்காத பலவிதமான நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சில நேரடி urgent care சேவைகளில் அதற்கேற்ற பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். சில நேரடி urgent care சேவைகள், மெடிக்கேர் என்ற மருத்துவ அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் சமூகம் சார்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச எக்ஸ்ரே மற்றும் நோயியல் சேவைகளையும் வழங்குகின்றன. இதனால் மக்கள் தங்கள் நோய் அல்லது காயத்தை ஒரே இடத்தில் விரைவாக பராமரித்துக்கொள்ள முடியும்.

    மெய்நிகர் urgent care சேவைகள், urgent care தேவைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மற்றும் ஆலோசனை வழங்கக்கூடிய சுகாதார நிபுணர்களுடன் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் மக்களை இணைக்கிறது. இவர்களில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் அடங்குவர், அவர்கள் நோயாளியின் நிலைமையை மதிப்பீடு செய்து, தகுந்த சிகிச்சை மற்றும் ஆலோசனையை வழங்குவர்.​

  • healthdirect-ஐ 1800 022 222 என்ற எண்ணில் எவரும் அழைத்து தகவல், ஆலோசனை அல்லது urgent care சேவை உட்பட சுகாதார சேவையுடன் இணைந்திருப்பது போன்ற சேவைகளை பெறுவது இலவசம்..

    மெடிக்கேர் என்ற மருத்துவ அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் சமூகம் சார்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் urgent care சேவை மூலம் சிகிச்சை பெறுவது இலவசம்.​

  • Urgent care சேவைகள் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுவாக திறந்திருக்கும். சில மெய்நிகர் urgent care சேவைகள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் கிடைக்கும்.

    healthdirect-ஐ 1800 022 222 என்ற எண்ணில் அழைத்து urgent care சேவையை அணுகுவதன் மூலம், மக்கள் தங்கள் இருப்பிடத்தில் உள்ள பொருத்தமான, கிடைக்கக்கூடிய சேவையுடன் இணைய முடியும்.

    h​ealthdirect-ஐ 1800 022 222 என்ற எண்ணில் 24 மணிநேரமும் வாரத்தில் 7 நாட்களும் அழைக்கலாம்.

  • NSW முழுவதும் 2025-ம் ஆண்டின் மத்தியில் இயங்கும் வகையில் 25 urgent care சேவைகளை வழங்குவதற்கு NSW அரசு நிதியளிக்கிறது. இந்த சேவைகள் பெருநகரங்கள், பிராந்தியங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பரந்து விரிந்து இயங்கவுள்ளன.

    இந்த நேரடி சேவைகளுக்கு கூடுதலாக, இரண்டு மெய்நிகர் urgent care சேவைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகின்றன:

    • மெய்நிகர் GP urgent care சேவை - குடும்ப மருத்துவர்களுடன் (GPs) தொலைநிலை அணுகலை வழங்குதல்.
    • virtualKIDS urgent care சேவை - குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு குழந்தை மருத்துவர்களுடன் மற்றும் சிறப்பு குழந்தை மருத்துவ செவிலியர்களுடன் தொலைநிலை அணுகலை வழங்குதல்.

    NSW-இல் பல இடங்களில் நிறுவப்படும் Medicare Urgent Care Clinics மூலம் urgent care சேவை வழங்குவதற்கு ஆஸ்திரேலியா அரசு நிதியுதவி அளிப்பதாக உறுதி செய்துள்ளது.​

  • healthdirect என்பது இணையதளம், செயலி மற்றும் தொலைபேசி உதவி எண் மூலம் சுகாதாரத் தகவல் மற்றும் ஆலோசனை வழங்கும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் சேவையாகும்.

    healthdirect, urgent care சேவைகள் உட்பட ஆனால் அதனோடு மட்டும் மட்டுப்படுத்தாமல் மக்களை தங்களின் உடல்நலத்தை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சரியான இடத்தில் உள்ள சரியான கவனிப்புடன் அவர்களை இணைக்கிறது.

    healthdirect-ஐ 1800 022 222 என்ற ஆதரவுதவி தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களும் இலவசமாக அழைக்கலாம்.

    அழைப்பவர்கள் பதிவுசெய்யப்பட்ட செவிலியருடன் பேசுவார்கள், செவிலியர் அவர்களின் நிலை குறித்து சில கேள்விகளைக் கேட்டதற்கு பின்னர், அவர்களின் நிலைமை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப சரியான இடத்தில் உள்ள அவர்களுக்குத் தேவையான கவனிப்புக்கு பின்வருபவை உட்பட வழிகாட்டுவார்.

    • நோயாளியின் வழக்கமான குடும்ப மருத்துவர் (GP) உட்பட, பொருத்தமான, கிடைக்கக்கூடிய உள்ளூர் சுகாதார சேவையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்குதல்
    • உள்ளூர் urgent care சேவையில் சந்திப்பை முன்பதிவு செய்தல்
    • குடும்ப மருத்துவர் (GP) அல்லது குழந்தை மருத்துவ செவிலியர் போன்ற சுகாதார நிபுணருடன் அழைப்பாளரை தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் இணைத்தல்
    • உடல்நலப் பிரச்சினையை வீட்டிலேயே பாதுகாப்பாக நிர்வகிக்க ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்குதல்
    • பொருத்தமான சமயத்தில் ஆம்புலன்ஸை அழைப்பது அல்லது நோயாளியை அருகில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்புதல்.​
  • NSW எல்லைக்கு அருகில் உள்ளவர்களுக்கு

    NSW-இல் வசிக்கும் அல்லது NSW-க்கு வெளியே உள்ள ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் வசித்து கொண்டு வருகை தருபவர்கள், NSW-இல் அமைந்துள்ள urgent care சேவைகளை அணுகலாம். NSW எல்லைக்கு அருகில் வசிக்கும் விரைவான மருத்துவ கவனிப்பு தேவைப்படுபவர்கள் 1800 022 222-இல் Healthdirect-ஐ அழைக்கும்போது , பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் NSW-க்குள் அமைந்துள்ள சேவைகளுடன் இணைக்கப்படலாம்.

    ஆஸ்திரேலியாவின் மற்றைய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ளவர்களுக்கு

    குயின்ஸ்லாந்தைத் தவிர அனைத்து ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ளவர்கள் 1800 022 222 என்ற எண்ணில் Healthdirect-ஐ (விக்டோரியாவில் NURSE-ON-CALL என அழைக்கப்படும்) அழைக்கலாம் அவர்கள் உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருத்தமான சுகாதார சேவைகளுடன் இணைக்கப்படுவார்கள்.

    குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்கள் அல்லது வருகை தருபவர்கள் 13 HEALTH (13 43 25 84) என்ற எண்ணை அழைத்து, பதிவு செய்யப்பட்ட செவிலியரிடம் 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் பேசலாம், அவர்கள் உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருத்தமான சுகாதார சேவைகளுடன் இணைக்கப்படுவார்கள்.

    ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் Medicare Urgent Care Clinics இயங்குகின்றன.

  • ஆம். NSW-இல் பல்வேறு urgent care சேவைகள் உள்ளன. அதில் பலவற்றில் அனைத்து வயதினருக்கும் சேவை கிடைக்கும்

    சிலவை குறிப்பாக வயதானவர்களுக்கு சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

    virtualKIDS urgent care சேவையானது 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு urgent care அளிக்கும் வகையில் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    h​ealthdirect மூலம் urgent care சேவைகளை அணுகுவதன் மூலம், மக்கள் தங்கள் சூழ்நிலை, இருப்பிடம் மற்றும் வயதுக்கு ஏற்ற சேவையுடன் இணைக்கப்படுவர்.

  • ஆம். எந்த வயதினரும் Healthdirect-ஐ அழைக்கலாம்.

    16 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடைய ஒரு குழந்தை Healthdirect-ஐ அழைக்கும் போது, செவிலியருடன் பேசக்கூடிய பெரியவர் அவர்களுடன் இருக்கிறாரா என்று செவிலியர் கேட்பார். பெரியவர்கள் யாரும் இல்லாவிட்டால், அல்லது குழந்தை தன்னுடைய தனியுரிமையைக் கோரினால், செவிலியர் குழந்தையின் நிலைமை மற்றும் இருப்பிடத்திற்கு மிகவும் பொருத்தமான சுகாதாரப் பாதுகாப்பைத் தீர்மானிக்க, குழந்தையின் நிலை குறித்து தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்பார். செவிலியர் பின்னர் குழந்தையின் வயதுக்கு ஏற்ற சுகாதார தகவல் மற்றும் சுகாதார ஆலோசனையை வழங்குவார் அல்லது குழந்தைக்கு மிகவும் பொருத்தமான சுகாதார பராமரிப்புடன் இணைப்பார்.​

  • NSW சுகாதாரம், சுகாதார இரகசியத் தன்மை மற்றும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது மற்றும் நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் பிற மூன்றாம் தரப்பினரின் இரகசியத் தன்மை உரிமைகளை மதிக்கவும் பராமரிக்கவும் சட்டத்தால் பிணைக்கப்பட்டுள்ளது

    NSW சுகாதாரம் மற்றும் NSW சுகாதாரம் வழங்கும் சுகாதார சேவைகளுக்குப் பொருந்தும் இரகசியத் தன்மைச் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றிய விரிவான தகவல்களை NSW சுகாதாரம் இணையதளத்தில்​ காணலாம்.​

  • உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத உடல்நலப் பிரச்சினைகளுக்கு அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பதிலாக urgent care சேவையை அணுகுவதன் மூலம், மக்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுகிறார்கள் மற்றும் பரபரப்பாக இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருப்பதைத் தவிர்க்கிறார்கள். இது அவசர சிகிச்சைப் பிரிவுகள் மீதான அழுத்தத்தை குறைக்கிறது, மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த நோயாளிகளின் மீது கவனம் செலுத்த வழிவகுக்கிறது.

    சில நேரடி urgent care சேவைகள் மெடிக்கேர் என்ற மருத்துவ அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் சமூகம் சார்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச எக்ஸ்ரே மற்றும் நோயியல் சேவைகளை வழங்குகின்றன. இதனால் இந்த சேவைகள் தேவைப்படும் நபர்கள் ஒரே இடத்தில் தங்களின் நோய் அல்லது காயத்தை விரைவாக நிர்வகிக்க முடியும்.​

  • Urgent care சேவை மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகள், தாங்கள் நோய்வாய்ப்படுவதாக உணர்ந்தாலோ அல்லது அவர்களின் நிலை மோசமாகிவிட்டாலோ உடனடியாக ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    Urgent care சேவையைப் பயன்படுத்தும் போது ஒரு நோயாளி நோய்வாய்ப்பட்டால், மருத்துவ மற்றும் தாதி பணியாளர்கள், அவர்களின் நிலையை விரைவாக மதிப்பீடு செய்து, அவர்களின் நிலைமை உயிருக்கு ஆபத்தானதாக இருந்தால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்வது உட்பட, அவர்களின் பராமரிப்புத் தேவைகளுக்கு சிறந்த இடம் எங்கே என்பதைத் தீர்மானிப்பார்கள்.

    நோயாளிகளும் அவர்களைப் பராமரிப்பவர்களும் எந்த நேரத்திலும் மூன்று பூஜ்ஜியங்களை (000) அழைக்கலாம்.​

  • நாங்கள் சிறப்பாக எதைச் செய்கிறோம் என்பதையும், எங்கள் சுகாதாரச் சேவைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதையும் புரிந்துகொள்ள உதவும் என்பதினால் நாங்கள் எல்லா பின்னூட்டல்களையும் வரவேற்கிறோம்

    healthdirect அல்லது urgent care சேவை மூலம் சிகிச்சை பெறுபவர்கள் தங்கள் அனுபவம் பற்றிய பின்னூட்டல் வழங்க மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்ளப்படலாம்.

    NSW சுகாதாரம் அல்லது healthdirect-இற்கு நேரடியாக பின்னூட்டல் வழங்க விரும்புபவர்கள் பின்வரும் வழிகாட்டுதலைப் பின்பற்றலாம்:

    • Urgent care சேவை மூலம் பெறப்பட்ட பராமரிப்பு பற்றிய பின்னூட்டலை (பாராட்டுகள், பரிந்துரைகள் அல்லது புகார்கள்) வழங்க, ​NSW சுகாதார இணையதளத்தில் கிடைக்கின்றன​
    • h​ealthdirect சேவைப் பற்றிய பின்னூட்டல் (பாராட்டுகள், பரிந்துரைகள் அல்லது புகார்கள்) வழங்க, தயவு செய்து இந்த இணையதளத்திற்கு​ செல்லவும்.​
  • NSW-இல் வழங்கப்படும் urgent care சேவைகள் பற்றி அனைத்து மொழிகளில் தகவல்களும் வளங்களும் NSW சுகாதார இணையதளத்தில் கிடைக்கின்றன

    NSW-இல் வழங்கப்படும் urgent care சேவைகள் பற்றி ஆங்கிலத்தில் கூடுதல் தகவல்களும் வளங்களும் NSW சுகாதார இணையதளத்தில்​ கிடைக்கின்றன.



Current as at: Monday 18 December 2023
Contact page owner: System Purchasing